வேலும் ஞானமும்



பொதுவாக எல்லாத் தெய்வங்களின் ஆயுதங்களையும் பூஜித்தாலும், இரண்டு ஆயுதங்கள் மட்டும் விஷேசமான பெருமை கொண்டவையாக விளங்குகின்றன. ஒன்று ஸ்ரீமன் நாராயணனின் சுதர்சன சக்ராயுதம் மற்றொன்று ஆறுமுகப் பெருமானின் வேலாயுதம். 

சுதர்சனரை சக்கரத்தாழ்வார் என்று தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற வைணவ தலங்களில் தரிசித்தாலும் வீட்டில் சக்கரத்தை வைத்து பூஜிக்கும் வழக்கமில்லை. ஆனால் முருகனின் சக்தி வேலை வீட்டிலேயே வைத்து அதை தனியாக பூஜிக்கும் பழக்கம் முருக பக்தர்களிடம் பன்னெடுங்காலாமாக உள்ள வழக்கம்.

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு அபிஷேகம் இல்லை. முருகனின் வேலுக்கே அபிஷேகம் . அவ்வளவு சிறப்பு பெறக் காரணம்?

பராசக்தியே தன்னுடைய சக்தியெல்லாம் திரட்டி வேலாக மாற்றி முருகனிடம் சூரனை வெல்ல அருளினாள்.
அருணகிரிநாதர் மேற்கூறியதை பின்வரும் திருப்புகழ் பதிகத்தில் குறிக்கிறார்.

தனிஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கௌமாரி கமலாசனக்
கன்னி நாரணி குமரி த்ரிபுரைபயிரவி அமலை
கௌரி காமாக்ஷி சைவ
சிங்காரி யாமளை பவாநிகர்த் திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற் றிருக்கை வேலே

இதை விட வேறென்ன சிறப்பு வேண்டும்.

ஆனாலும் மற்றொரு சிறப்புண்டு. முருகனின் வேல் ஞானத்தின் குறியீடு. அறிவு எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு அடையாளம். 

அறிவானது ஆழ்ந்து இருக்க வேண்டும். மேலோட்டமாக மட்டுமே இருக்க கூடாது என்பதை வேலின் நீளமான அடிப்பகுதி குறிக்கிறது.

அறிவானது குறுகியதாக இல்லாமல் அகலமாக இருக்க வேண்டுமென்பதை வேலின் முகத்தின் அடிப்பகுதி நன்கு விரிந்திருப்பது காண்பிக்கிறது.

அறிவானது கூர்மையாக இருக்க வேண்டுமென்பதை வேலின் நுனிப் பகுதி விளக்குகிறது.

வேலை வழிபடுவது சகல தெய்வத்திற்கும் ஆதாரமான பராசக்தியை வழிபடுதலே ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 1

சதாக்ஷி - கடும் பஞ்சம் தீர்த்த ஆயிரம் கண்ணுடையாள்!

மகிமை மிக்க ஸ்ரீமாதங்கி பீடம் - மதுரை