இரட்டைப் பிள்ளையார்
சில இடங்களில் இரண்டு பிள்ளையார் ஒன்றாக இருப்பதை காணலாம். வேறு எந்த தெய்வத்தையும் இப்படி இரண்டாக ஒரே சன்னிதியில் பார்த்ததில்லை.
ஏன் இப்படி இருக்கிறது?
விக்நராஜோ விநாயக: என்று அவருடைய ஷோடச நாமாவளியில் விக்நராஜருக்கு அடுத்தப்படியாக விநாயகர் வருகிறது.
விக்நராஜர்
- என்றால் இடையூறுகளுக்கு ராஜா என்பதல்ல அர்த்தம். நமக்கு பூர்வ
வினையினால் ஏற்படும் உபத்திரவங்களை அடக்கி ஆள்பவர் என்று பொருள். நாம்
அகந்தை கொண்டு ஆடினால் நம்மை ஒரு நிதானத்திற்கு கொண்டு வரவும் விக்னங்களை
உண்டு பண்ணி அதன் மூலமும் நமக்கு தெளிவை உண்டாக்கி அநுக்கிரஹம் செய்பவர்.
விநாயகர் - நமக்கு வரும் இடையூறுகளை அகற்றுபவர் என்று பொருள்.
ஆனால்
இப்படி நமக்கு வரும் இடையூறுகள் எல்லாவற்றையும் பிள்ளையாரப்பர் அகற்றி
விட்டால் நமக்கெல்லாம் தப்பு செய்ய பயம் இல்லாமல் போய்விடும். அதனால் தான்
அவர் விக்நராஜராக இருந்து நம் கர்ம வினைக்கேற்ப நமக்கு பெரிதாக வரவேண்டிய
தோல்வியை மாற்றி நம் முயற்சியில் சிறு சிறு இடையூறுகளையும் உண்டாக்கி நம்
கர்ம வினை எனும் மூட்டையை குறைக்கிறார்.
அதே
சமயம் முழுதாக தோல்வியில் நம்மை துவள செய்யாமல் விநாயகராக வந்து இந்த
இடையூறுகள் நம்மை ரொம்ப படுத்தாமல் நமக்கு அநுக்கிரகம் செய்து இறுதியாக
வெற்றியையும் கொடுக்கிறார். இவ்வாறு விநாயகர் நம் கர்ம வினையை குறைத்து
அடுத்த ஜன்மாவிற்கு நல்லது செய்து, இறுதியில் செய்த முயற்சிக்கு
வெற்றியையும் கொடுத்து இந்த ஜன்மாவிலும் நம்மை காப்பாற்றுகிறார். இதை
உணர்த்தவே இரட்டை பிள்ளையாராக பிரதிஷ்டை செய்தனர் பெரியோர்கள்.
குறிப்பு
: தெய்வத்தின் குரலில் வெளிவந்த மஹா பெரியவாள் என்று பக்தியோடு
அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் உரையில் படித்து
அறிந்ததை என்னுடைய வார்த்தைகளில் பதிவிட்டிருக்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக