மகிமை மிக்க ஸ்ரீமாதங்கி பீடம் - மதுரை
![]() |
ஸ்ரீராஜமாதங்கி |
மதுரையில் மீனாக்ஷி ராஜ்ஜியம் எவ்வாறு கொடிக்கட்டி பறக்கிறது என்பதை என்னுடைய முதல் பதிவில் இங்கு காணலாம். இப்படி ஸர்வேஸ்வரி இங்கு
ஸ்ரீராஜமாதங்கியாக எழுந்தருளி அரசாட்சி புரிவதால் தான் இவ்வளவு மகிமை என்று எண்ண தோன்றுகிறது. அப்படி என்ன விஷேஷம் இந்த ஸ்ரீராஜமாதங்கிக்கு என்று பார்க்கலாம்.
பராபட்டாரிகையான ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவளே ஸ்ரீராஜமாதங்கி. இவளே ஸ்ரீலலிதையின் ராஜ்ஜியதில் பிரதம மந்திரி, பெண் என்பதால் மந்திரிணி. மரகத வர்ணத்தில் ஜொலிப்பதால் ச்யாமளை என்றும் அழைக்கப்படுகிறாள்.
லலிதையின் ஸ்ரீபுரத்திலுள்ள கடம்பவனத்துள் உலவுபவள் ச்யாமளா தேவி. அதனால் தான் பூவுலகின் கடம்பவனம் என்று போற்றப்படும் மதுரையில், மலையத்வஜ பாண்டிய மன்னன்- காஞ்சனமாலை ஆகியோரின் வேண்டுதலை ஏற்று அக்னி குண்டத்தில் உதித்தாள் போலும். பராசக்தியான ஸ்ரீலலிதையும் சிதக்னி குண்டதில் தான் உதித்தாள் என்பது பராசக்தியும் ஸ்ரீராஜமாதங்கியும் வெவ்வேறல்ல என்பதை உணர்த்துகிறது.
ஸ்ரீலலிதைக்கு மந்த்ர ஆலோசனை வழங்குபவள். இதிலிருந்து ராஜ்ஜிய பாரம் பண்ணுவது என்பது இவளுக்கு புதிதல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, அதனாலயே மதுரையிலும் செங்கோலேந்தி ராணியாக ஆட்சி செய்கிறாள் போலும்!
ஸ்ரீராஜமாதங்கி தேவி ஸ்ரீலலிதையின் மனமாக திகழ்கின்றாள், அதனாலயே பராசக்தியும் ஸ்ரீராஜமாதங்கியும் வெவ்வேறல்ல என்பது புலனாகிறது. இவள் மதங்க முனிவரின் அருந்தவப்புதல்வி அதனாலேயே மாதங்கி என அழைக்கப்படுகிறாள்.மாதங்கியின் பிறப்பை பற்றி திருவெண்காடு தலபுராணம் விரிவாக கூறுகிறது.
தச மஹா வித்யையில் ஒன்பதாவது ஸ்வருபமாக வருகின்ற
ராஜமாதங்கி இவளே ஆகும். இந்த அன்னையே ராஜச்யாமளா என்றும் அழைக்கப்படுகிறாள்.
![]() |
ஸ்ரீலலிதா பரமேஸ்வரி |
லலிதையின் ஸ்ரீபுரத்திலுள்ள கடம்பவனத்துள் உலவுபவள் ச்யாமளா தேவி. அதனால் தான் பூவுலகின் கடம்பவனம் என்று போற்றப்படும் மதுரையில், மலையத்வஜ பாண்டிய மன்னன்- காஞ்சனமாலை ஆகியோரின் வேண்டுதலை ஏற்று அக்னி குண்டத்தில் உதித்தாள் போலும். பராசக்தியான ஸ்ரீலலிதையும் சிதக்னி குண்டதில் தான் உதித்தாள் என்பது பராசக்தியும் ஸ்ரீராஜமாதங்கியும் வெவ்வேறல்ல என்பதை உணர்த்துகிறது.
ஸ்ரீலலிதைக்கு மந்த்ர ஆலோசனை வழங்குபவள். இதிலிருந்து ராஜ்ஜிய பாரம் பண்ணுவது என்பது இவளுக்கு புதிதல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, அதனாலயே மதுரையிலும் செங்கோலேந்தி ராணியாக ஆட்சி செய்கிறாள் போலும்!
![]() |
ஸ்ரீமீனாக்ஷி பட்டாபிஷேகம் |
ஒரு பிரளய காலத்தில், பிரம்மதேவன் யானை வடிவில் சிவபெருமானைக் குறித்து தியானம் செய்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றியவர் மதங்க முனிவர் (மதங்கம் என்றால் யானை).
பிரம்மதேவரின் உத்தரவை ஏற்று மதங்க முனிவர், திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யம் என்ற வனத்தில் ஈசனை நோக்கி கடும் தவம் இயற்றியபோது இறைவனின் காட்சி கிடைத்தது. என்ன வரம் வேண்டும்? என இறைவன் கேட்டபோது, ஆதிபராசக்தியே தன் மகளாகப் பிறந்திட வேண்டும் என்று வேண்டினார் மதங்கர். இறைவனும் அப்படியே வரம் தந்தார். பின்னர், சிவனாரின் ஆசியோடு அவர் அருளிய பஞ்ச தசாட்சரி மந்திரத்தை ஒரு சோலையில் அமர்ந்து ஜெபம் செய்தார் மதங்கர். அங்கே, முனிவருக்குக் காட்சி தந்த பராசக்தி. என் மனதின் வாக்கின் படி மந்திரிணியே உமக்கு மகளாய் பிறப்பாள் என்று வரமருளினாள்.
ஒரு ஆடி மாத வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில், மதங்க புஷ்கரணியில் மலர்ந்த நீலோத்பல மலரில், மரகதப் பசுமை நிறத்துடன் கரங்களில் வீணை, கிளியோடு மைவிழியளாகப் பெண் குழந்தையாகக் காட்சி தந்தாள் (ஸ்ரீமீனாக்ஷியும் மரகதப் பசுமை நிறத்தாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). ஒரு சித்திரை மாதம் சுக்லபட்ச சப்தமி திதியில் பரமேஸ்வரனைத் திருமணம் செய்து கொண்டாள்.
மாணிக்க வீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுள வாக் விலாஸாம்
மஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
மாதா மரகத ஸ்யாமா மாதங்கி மதசாலினி
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவன வாஸினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவன வாஸினீ
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா சுகப்ரியே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா சுகப்ரியே
என்று மகாகவி காளிதாஸன் மாதங்கியை போற்றி ச்யாமளா தண்டகம் இயற்றினார். பரம மூடனாக இருந்தவன், காளியின் அருளால் கவிபாடும் திறமை பெற்று காளிதாஸனாகி ரகுவம்சம், சாகுந்தலம் என காலத்தால் அழியாத பல படைப்புகளை தந்தார். அப்படி காளியின் அருள் பெற்று கவி பாடினாலும், அவர் முதலில் அம்பிகையின் மாதங்கி வடிவத்தை வாழ்த்தி தான் ச்யாமளா தண்டகம் இயற்றினார்.
ஏனென்றால் இவளே சகல கலைகளுக்கும் அதிபதி. அதனாலேயே இவளுடைய கோயிலும் கலை கூடாரமாக, ஓங்கி உயர்ந்த கோபுரங்களுடன் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது.
வாக்கு சித்தி, அறிவுக்கூர்மை, சகல கலைகளிலும் வல்லமை, மந்திரசித்தி, எடுத்த காரியங்களில் வெற்றி பெற விரும்புவோருக்கு ச்யாமளா என்படும் மீனாக்ஷி உபாசனை மிகச்சிறந்தது.
ராஜமாதங்கி இவளே ஆகும். இந்த அன்னையே ராஜச்யாமளா என்றும் அழைக்கப்படுகிறாள்.
கண் களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும்குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர்குல
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே!
என்று அபிராமி பட்டர் அன்னை ராஜச்யாமளையை போற்றுகிறார். அவரை பின்பற்றி அன்னையின் சரணாரவிந்தங்களை பணிந்து அவள் அருள் பெறுவோம்!
Absolutely true... Meenakshi is mathangi... She is manthrini... She is the close associate of Lalitha... Also heads the army and she rides the chariot called "Geya chakra" very powerful of 4 ministers of lalitha. Also called Rajashyamala... She helps to get kingly friendship and favours and also helps sadhaka get great knowledge and sarva Kala siddhi... Esp music...
பதிலளிநீக்குThanks Guru!
பதிலளிநீக்கு