பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 5
சகல லோகத்தையும் ஆட்டிவிக்கும் ஸர்வேஸ்வரன் ஆனந்த நடனமாட
வந்திருப்பதாக முனிவர்கள் கூறினர். ஈசனுடன் விளையாட நினைத்த காளி "ஓ ,
எனக்கு ஈடாக ஆட முடியுமா உங்கள் ஈசனால் " என்று கேட்க. என்ன சொல்வது எனத்
தெரியாமல் முனிவர்கள் ஈசனை நோக்க, அவரோ புன்முறுவலோடு போட்டியிட சம்மதம்
தெரிவித்தார்.
அண்ட
சராசரமனத்தையும் ஆட்டுவிக்கும் ஜகத்பிதாவும், ஜகன்மாதாவும் போட்டி நடனமாட
தொடங்கினர். காளி புரிந்த அனைத்து அசைவுகளையும் சரியாக ஆடி காட்டினார்
ஈசன்.
இப்பொழுது ஈஸ்வரன் ஆடுகின்ற அனைத்து அசைவுகளையும் இம்மியளவு கூட பிசகாமல் ஆடி போட்டியை விறுவிறுப்பாக்கினாள் காளி.
பார்த்தார்
ஈசன் செங்குத்தாக தன் இடக்காலை தூக்கி தலைக்கருகில் பாதத்தை கொண்டு சென்று
விட்டார். பராசக்தியால் இயலாத காரியமென்று ஒன்று உண்டோ? ஆனால் போட்டியை
முடிக்க நினைத்து ஈசனை கண்டு நாணி நின்றாள் சிவசக்தி .
போட்டி
முடிவுற்றதால் முப்பது முக்கோடி தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள்,
முனிவர்கள் முன்னிலையில் நந்தியும் விஷ்ணுவும் மத்தளம் கொட்ட
தாருகாவனத்தில் ஆடிய ஆனந்த தாண்டவத்தை தில்லை வனத்தில் நிகழ்த்திக்
காட்டினார் பரமேஸ்வரர்.
இப்படி
வியாக்ரபாதர், பதஞ்சலி மற்றும் ஜைமினி முனிவர்களுக்காக நடராஜர் ஆடியது ஒரு
தைப்பூச திருநாளில் ஆகும். தாருகாவனத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்த்தியது
மார்கழி திருவாதிரை ஆகும். இந்நாளையே நாம் ஆருத்ரா தரிசனம் என்று
வழிப்படுகிறோம்.
ஈஸ்வரன்
இப்படி காளியுடன் போட்டியிட்டு ஆடி பின்பு ஆனந்த தாண்டவம் ஆடிய இடம்
சிதம்பரம் கோயிலில் இப்போது இருக்கும் நிருத்த சபை ஆகும். இங்கு இப்போது
ஊர்த்துவ தாண்டவரை தரிசிக்கலாம். ஈசனுடன் போட்டியிட்ட காளி ஊர் எல்லையில்
சிதம்பரத்தின் காவல் தெய்வமாய் விளங்குகிறாள். இவளை தரிசிக்காவிட்டால்
சிதம்பர தரிசனம் பூர்த்தி அடையாது என்று ஈசன் அனுக்கிரஹித்துள்ளார்.
இப்படி
பரமேஸ்வரர் ஆடிய இடத்தில் இந்திரனின் ஆணைப்படி விஸ்வகர்மா சித்சபையை
நிறுவினார்.
கைலாயத்தில் இருந்த திரி ஸகஸ்ர கணங்கள் ஈசன் இப்படி தில்லையில்
இருப்பதையறிந்து இங்கே வந்து விட்டார்கள்.
இந்த
திரி ஸகஸ்ர கணங்களே தில்லை மூவாயிரர் என்று அழைக்ப்படும் தில்லைவாழ்
அந்தணர்கள். திருஞானசம்பந்தர் சிதம்பரம் வந்த பொழுது தில்லைவாழ் அந்தணர்கள்
அனைவரும் சிவ கணங்களாகவே தெரிந்ததாக தனது தேவாரத்தில் பாடியிருக்கிறார்.
இவர்களின் வழி வந்தவர்களை தான் இன்று சிதம்பரம் தீக்ஷிதர்கள் என்று பொதுவாக
அழைக்கிறோம். இவர்களே இன்றும் சிதம்பரம் கோயிலின் அனைத்து பூஜைகளையும்
செய்கிறார்கள்.
சிவன்
கோயில்களின் தலைமை கோயிலான சிதம்பரம் கோயிலின் பூஜை முறைகளை வகுத்து
கொடுத்தவர் பதஞ்சலி . சக்தி பீடங்களின் முதன்மை பீடமான காஞ்சி காமாக்ஷி
கோயிலின் பூஜை முறைகளை வகுத்து கொடுத்தவர் துர்வாசர். துர்வாசரும்
பதஞ்சலியும் சகோதரர்கள். மூம்மூர்த்திகளின் அம்சமானவரும் அவதூத குரு
பரம்பரையை தொடங்கிய தத்தாத்ரேயர், பதஞ்சலி, துர்வாஸர் மற்றும் அருந்ததி
ஆகியோர் அத்ரி அனுசூயாவின் புத்திரர்கள் ஆவர்.
சிதம்பரத்தைப் பற்றி கூறிவிட்டு சிதம்பர ரகசியத்தைப் பற்றி பேசாமல் போக முடியுமா? அடுத்த பதிவில் பார்க்கலாம் :)






கருத்துகள்
கருத்துரையிடுக