பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 4
மஹாவிஷ்ணு ஆதிஷேனனை ஸர்வேஸ்வரனை நோக்கி தவமியற்றுமாறு அருளினார்.
ஈசனின் ஆக்ஞை படி ஆதிஷேசன் சிறிய பாம்பு வடிவந்தாங்கி அத்ரி முனிவரின் ஆசிரமம் அடைந்தார். அப்போது நதிக்கரையில் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்த அனுசூயா தேவி தன் இரு கைகளாலும் தண்ணீரை எடுத்த பொழுது அவர் கைகளில் வந்து விழுந்தார் ஆதிஷேசன்.
ஆதிஷேஷன்
இமயமலை அடிவாரத்திலே ஸர்வேஸ்வரரை நோக்கி கடுமையான தவமியற்றினார்.
மனமிரங்கிய கயிலைநாதன் ஆதி ஷேஷனுக்கு காட்சியளித்து அவரை அத்ரி
மஹரிஷிக்கும் அனுசூயா தேவிக்கும் மகனாக பிறந்து தவத்தை தொடருமாறு
அனுக்ரஹித்து மறைந்தார்.
ஈசனின் ஆக்ஞை படி ஆதிஷேசன் சிறிய பாம்பு வடிவந்தாங்கி அத்ரி முனிவரின் ஆசிரமம் அடைந்தார். அப்போது நதிக்கரையில் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்த அனுசூயா தேவி தன் இரு கைகளாலும் தண்ணீரை எடுத்த பொழுது அவர் கைகளில் வந்து விழுந்தார் ஆதிஷேசன்.
பாம்பு என்று
பதறி அனுசூயா கைகளை உதறவே, அந்த பாம்பானது அனுசூயாவின் கால்களில்
விழுந்தது, விழுந்த உடனே ஒரு சிறு பாலகனாக உருமாறிய அந்த பாம்பு கூப்பிய
(அஞ்சலி) கைகளோடு அனுசூயாவை வணங்கியது. அங்கே வந்த அத்ரி மகரிஷியிடம் தன்னை
மகனாக ஏற்றக் கொள்ளுமாறு அந்த பாலகன் வேண்டினான். அதை ஏற்ற அத்ரி ,
பாதத்தில்(பத) கூப்பிய கைகளோடு(அஞ்சலி) கிடைத்தமையால் பதஞ்சலி எனப்
பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
உரிய
வயது வந்தவுடன் அத்ரி மஹரிஷி பதஞ்சலிக்கு உபநயனம் செய்வித்து தகுந்த
மந்த்ரோபதேசம் செய்வித்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய பதஞ்சலியை
தென்பகுதியிலிருக்கும் தில்லைவனத்தில் எழுந்தருளியிருக்கும் மூலட்டனாதரை
வழிபடுமாறு அறிவுறுத்தினார்.
தந்தையின்
சொற்படி தில்லையை அடைந்த பதஞ்சலி அங்கு ஏற்கனவே தவமியற்றிக் கொண்டிருந்த
புலிக்கால் முனிவரான வ்யாக்ரபாதருடன் இணைந்து பரமேஸ்வரனின் ஆனந்த
தாண்டவத்தைக் காண தவமியற்றினார்கள்.
இவர்களோடு வேத வியாசரின் சீடரான ஜைமினி முனிவரும் இணைந்து சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காண கடும் தவமியற்றினார்கள்.
ஜைமினி
முனிவரைப் பற்றிய விவரங்கள் அவ்வளவாக கிடைக்கவில்லை. இவரும் ஈசனின் ஆனந்த
தாண்டவத்தை காணும் பெரும் பேற்றை பெற்றவர் என்பதை தை மாதத் திருவிழாவின்
முக்கிய நிகழ்ச்சியான திருநடனம் காட்டும் நிகழ்வு வ்யாக்ரபாதர், பதஞ்சலி
மற்றும் ஜைமினி ஆகிய மூன்று முனிவர்களும் ஒரே உலோகச் சிலையிலிருக்கும்
மூர்த்தம் முன்பே நடத்தப்படுகிறது என்பதிலிருந்து அறியலாம்.
மேலும்
சிதம்பரம் நடராஜர் கோவிலின் பரிவார மூர்த்தி சன்னிதிகளில் ஜைமினி
முனிவரின் சன்னிதியும் ஒன்றாகும். ஆனந்த தாண்டவத்தை கண்ட பரவசத்தில் இவர்
பாடிய "வேத பாத ஸ்தவம்" மிகவும் புகழ்ப்பெற்றது.
மூன்று
முனிவர்களின் தவத்தில் மகிழ்ந்த ஈசனும் அவர்கள் முன் தோன்றி என்ன வரம்
வேண்டுமென்று எல்லாம் அறிந்த பரமேஸ்வரர் வினவினார். தாருகாவனத்தில் ஈசன்
நிகழ்த்திய ஆனந்த தாண்டவத்தை இவ்விடத்தில் நிகழ்த்த வேண்டும் அதை தாங்கள்
தரிசிக்க வேண்டுமென கோரினர் முனிவர்கள். அப்படியே ஆகட்டும் எனக் கூறிய
சர்வேஸ்வரர் ஆனால் ஆடுவதற்கு மேடை வேண்டும் எனவும் சரியான மேடையை
காட்டுங்கள் என முனிவர்களிடமே கூறிவிட்டார்.
இந்த
காட்டில் எங்கே மேடை எனத் தவித்தனர் முனிவர்கள். அதே வனத்தில் அசுரர்களை
வதைத்து விட்டு ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும் காளிக் கோயிலில் நட்டம் புரிய
வேண்டுமென கேட்டு கொண்டனர்.
வேண்டுதலை
ஏற்று முனிவர்களோடு சேர்ந்து தில்லைக் காளியின் சன்னிதியை அடைந்தார்
ஈஸ்வரன். உள்ளே நுழைந்த அடுத்த கணமே "யாரது" என கணிர் குரலில் காளி
கர்ஜித்தாள்.
முனிவர்கள் என்ன பதிலளித்தனர் என்பது அடுத்த பதிவில் :)
கருத்துகள்
கருத்துரையிடுக