பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 2
சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் உறவினரான மத்யந்தினர்
என்னும் மகரிஷிக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மாத்யந்தினர் எனப்
பெயரிட்டு தானே குருவாக இருந்து சிவ பக்தியை போதித்து வளர்த்து வந்தார்.
ஒரு நாள் மாத்யந்தினர் தன் தந்தையை நோக்கி "இறைவனை அடையும் வழி யாது? என
வினவ, அவரும் தென்திசையில் தில்லைவனத்தில் எழுந்தருளியிருக்கின்ற ஈசனான ஆதி
மூலநாதரை வழிபடுமாறு அறிவுறுத்தினார்.
மாத்யந்தினர்
அதனை ஏற்று தில்லைவனத்தை அடைந்து ஓங்கி உயர்ந்த ஒரு தில்லை மரத்தினடியில்
சுயம்புவாக காட்சி தந்த பரமேஸ்வரனை கண்டு மகிழ்ந்து ஈசனை நீண்ட காலம்
பூஜித்து வந்தார்.
அதிகாலையில் கண் விழித்து அக்காட்டில் மலர்ந்த மலர்களை கொண்டு ஈசனுக்கு நித்ய பூஜைகளை புரிந்து வந்தார். ஆயினும் அவர் மனதை ஒரு குறை வாட்டிக் கொண்டிருந்தது. விடிந்த பிறகு பூக்களை பறித்தால் வண்டுகள் தேனை உண்டு எச்சில் பட்ட மலர்களாகி விட்டன.விடியும் முன்பே மலர்களை பறிக்கலாம் என்றால் கண் பார்வை அவ்வளவு கூர்மையாக இல்லை அத்தோடு ஓங்கி உயர்ந்த மரங்களில் ஏறும் பொழுது வழுக்குகிறது என்று மனம் கலங்கினார்.

அவரின்
மனக்குறையை போக்க நினைத்த ஈசன் அவர்முன் தோன்றி மரங்களில் வழுக்காமல்
இருப்பதற்காக புலியின் கால்களையும் இரவிலும் நன்றாக தெரியும் கூரிய
பார்வையையும் வரமாக அருளினார். இதனால் இதனால் இவர் வியாக்ரபாதர் என
வடமொழியிலும் புலிக்கால் முனிவர் என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.
இவ்வாறு
சிவ பூஜையிலே அனுதினமும் ஈடுப்பட்டிருந்த வியாக்ரபாதர் மனதில் ஒரு ஆசை
தோன்றியது. அது தாருகாவனத்தில் ஈசன் ஆனந்த தாண்டவம் புரிந்த பொழுது அதை
காணும் பேறு தனக்கு கிட்டவில்லையே என்று வருந்தி அந்த திருக்காட்சியை
தானும் காணவேண்டும் என் உறுதிக்கொண்டு தவத்தில் ஈடுப்பட்டார்.
இவரை போலவே இன்னொரு முனிவரான பதஞ்சலியும் தில்லைவனத்தில் ஈசனின் ஆனந்த தாண்டவத்தை காண வியாக்ரபாதருடன் தவமியற்றினார்.
இந்த பதஞ்சலி யார்? அதை அறிந்து கொள்ள நாம் அடுத்த பதிவில் வைகுண்டம் செல்ல வேண்டும் :)
இந்த பதஞ்சலி யார்? அதை அறிந்து கொள்ள நாம் அடுத்த பதிவில் வைகுண்டம் செல்ல வேண்டும் :)
கருத்துகள்
கருத்துரையிடுக