இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்பிகையும் நாராயணனும்

படம்
  பராசக்தியான தேவி ஸ்ருஷ்டியின் பொழுது ப்ரக்ருதியான புவனேஸ்வரியாகவும், ராஜ்ய பரிபாலனம் செய்யும் பொழுது பவானியாகவும், யுத்தத்தில் மஹாதுர்க்கையாகவும், பிரளய காலத்தில் மஹாகாளியாகவும், குழந்தை வடிவில் பாலா திரிபுரசுந்தரியாகவும், புருஷ ரூபத்தில் விஷ்ணுவாகவும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறும்.     பரமேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரர் ஸ்வரூபத்தில் தன் உடலின் இடப்பகுதியை உமையவளான பராசக்திக்கு அளித்தார்.அதே பரமேஸ்வரர் ஹரிஹரனாக காட்சி தரும் திவ்ய கோலத்தில் உமையவளுக்குண்டான  இடப்பகுதியில்  நாராயணர் காட்சி தருகிறார். இதுவே அன்னை புருஷ ரூபத்தில் விஷ்ணுவாக இருப்பதை ஊர்ஜிதபடுத்துகிறது.     கிருஷ்ணனின் புகழ் வாய்ந்த மற்றொரு பெயர் முகுந்தன். முகுந்தன் என்றால் முக்தியளிப்வன் என்று பொருள். அம்பிகையையும் இதே பொருளில் லலிதா ஸஹஸ்ரநாமம் முகுந்தா என்றழைக்கிறது. அன்னையை வழிபடும் ஸ்ரீவித்யா மார்க்கத்தில் கோபால சுந்தரி என்று ஒரு வடிவம் உண்டு. பாதி தேகம் கோபால கிருஷ்ணனாகவும் இன்னொரு பாதி லலிதா மஹாத்ரிபுரசுந்தரியாகவும் இருக்கும் அற்புத கோலம்....

இரட்டைப் பிள்ளையார்

படம்
சில இடங்களில் இரண்டு பிள்ளையார் ஒன்றாக இருப்பதை காணலாம். வேறு எந்த தெய்வத்தையும் இப்படி இரண்டாக ஒரே சன்னிதியில் பார்த்ததில்லை. ஏன் இப்படி இருக்கிறது? விக்நராஜோ விநாயக: என்று அவருடைய ஷோடச நாமாவளியில் விக்நராஜருக்கு அடுத்தப்படியாக விநாயகர் வருகிறது. விக்நராஜர் - என்றால் இடையூறுகளுக்கு ராஜா என்பதல்ல அர்த்தம். நமக்கு பூர்வ வினையினால் ஏற்படும் உபத்திரவங்களை அடக்கி ஆள்பவர் என்று பொருள். நாம் அகந்தை கொண்டு ஆடினால் நம்மை ஒரு நிதானத்திற்கு கொண்டு வரவும் விக்னங்களை உண்டு பண்ணி அதன் மூலமும் நமக்கு தெளிவை உண்டாக்கி அநுக்கிரஹம் செய்பவர். விநாயகர் - நமக்கு வரும் இடையூறுகளை அகற்றுபவர் என்று பொருள்.     ஆனால் இப்படி நமக்கு வரும் இடையூறுகள் எல்லாவற்றையும் பிள்ளையாரப்பர் அகற்றி விட்டால் நமக்கெல்லாம் தப்பு செய்ய பயம் இல்லாமல் போய்விடும். அதனால் தான் அவர் விக்நராஜராக இருந்து நம் கர்ம வினைக்கேற்ப நமக்கு பெரிதாக வரவேண்டிய தோல்வியை மாற்றி நம் முயற்சியில் சிறு சிறு இடையூறுகளையும் உண்டாக்கி நம் கர்ம வினை எனும் மூட்டையை குறைக்கிறார்.     அதே...

வேலும் ஞானமும்

படம்
பொதுவாக எல்லாத் தெய்வங்களின் ஆயுதங்களையும் பூஜித்தாலும், இரண்டு ஆயுதங்கள் மட்டும் விஷேசமான பெருமை கொண்டவையாக விளங்குகின்றன. ஒன்று ஸ்ரீமன் நாராயணனின் சுதர்சன சக்ராயுதம் மற்றொன்று ஆறுமுகப் பெருமானின் வேலாயுதம்.  சுதர்சனரை சக்கரத்தாழ்வார் என்று தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற வைணவ தலங்களில் தரிசித்தாலும் வீட்டில் சக்கரத்தை வைத்து பூஜிக்கும் வழக்கமில்லை. ஆனால் முருகனின் சக்தி வேலை வீட்டிலேயே வைத்து அதை தனியாக பூஜிக்கும் பழக்கம் முருக பக்தர்களிடம் பன்னெடுங்காலாமாக உள்ள வழக்கம். முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு அபிஷேகம் இல்லை. முருகனின் வேலுக்கே அபிஷேகம் . அவ்வளவு சிறப்பு பெறக் காரணம்? பராசக்தியே தன்னுடைய சக்தியெல்லாம் திரட்டி வேலாக மாற்றி முருகனிடம் சூரனை வெல்ல அருளினாள். அருணகிரிநாதர் மேற்கூறியதை பின்வரும் திருப்புகழ் பதிகத்தில் குறிக்கிறார். தனிஆண்மை கொண்ட நெடுவேல் கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கௌமாரி கமலாசனக் கன்னி நாரணி குமரி த்ரிபுரைபயிரவி அமலை கௌரி காமாக்ஷி சைவ சிங்காரி யாமளை பவாநிகர்த் தி...

ஸ்ரீதேவி மாஹாத்மியம் ஓர் அறிமுகம்

படம்
    "கலெள சண்டி வினாயகெள" அதாவது கலியுகத்தில் விரைவாக பலனை வழங்க கூடியவர்கள் சண்டி என்றழைக்கப்படும் சண்டிகா பரமேஸ்வரியும் விநாயகருமே ஆவார்கள். துர்கா பரமேஸ்வரியின் இன்னொரு திருநாமமே சண்டிகா பரமேஸ்வரி ஆகும். இந்த சண்டி தேவியின் பெருமையை கூறுவதே ஸ்ரீதேவீ மாஹாத்மியம். எவ்வாறு பகவத்கீதை 700 ஸ்லோகங்களுடன் மகாபாரதத்தின் நடுநாயகமாக விளங்குகிறதோ அதைப் போலவே ஸ்ரீதேவி மாஹாத்மியம் மார்கண்டேய புராணத்தில் நடுநாயகமாக விளங்குகிறது. இது மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருகிறது.  சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தஸதீ என்றும் அழைப்பார்கள். சண்டீ பாராயணத்தின் பெருமையை பற்றி பத்ம புராணம் மற்றும் ஸ்ரீதேவி பாகவதம் போன்ற நூல்களிலிருந்து அறியலாம். சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காப்ரதீபம் போன்ற பல உரைகள் இந்நூலிற்கு உண்டு. இவற்றில் நீலகண்டர் எழுதிய துர்க்காப்ரதீபம், நாகேச பட்டர் எழுதிய நாகேசீ மற்றும்  பாஸ்கர ராயர் எழுத...

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 7

படம்
ஒரு சமயம் உயர்ந்த ஒரு யாகத்தை நடத்த விரும்பிய பிரம்ம தேவர் அதை நடத்திக் கொடுக்க மிகச் சிறந்த வேதியர்களை தேடினார். சிவ கணங்களே வேதியராக விளங்கும் தில்லை மூவாயிரரை யாகத்தை நடத்திக் கொடுக்குமாறு விண்ணப்பித்தார். அதை ஒரு நிபந்தனையோடு ஏற்று கொண்டார்கள் தில்லை மூவாயிரர். அப்படி என்ன நிபந்தனை ? யாகம் முடிந்தவுடனே தங்களை தில்லை அனுப்பி விட வேண்டும். நராஜருக்கு ஒரு நாள் கூட பூஜை செய்யாமல் இருக்க முடியாது என கூறி விட்டார்கள். இதை ஏற்று கொண்ட பிரம்மா அவர்களை அழைத்துக் கொண்டு போய் அவருடைய யாகத்தை நடத்தினார். யாகமும் சிறப்பாக நடந்து முடிந்ததும், யாகத்தை நடத்திக் கொடுத்த தில்லை மூவாயிரரை உணவருந்திச் செல்லுமாறு வேண்டினார். ஆனால் நடராஜரை பூஜிக்காமல் உணவருந்த மாட்டோம் என்று வேதியர்கள் உறுதியாக கூறி விட்டனர். மிகுந்த துக்கமடைந்த பிரம்மா சர்வேஸ்வரரிடம் சரணடைந்தார்.  உடனே யாக குண்டத்தில் மிக அற்புதமான தேஜஸூடன் நடராஜர் காட்சியளித்தார்.     யாகத் தீயில் ஜோதி ஸ்வருபமாக இருந்த பரமேஸ்வரரை ஹோமத் திரவியங்களான பால், தேன் மற்றும் சந்தனத்தைக் கொண்டு அபிஷேகித்தனர் ...

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 6

படம்
சிதம்பர ரகசியம்: சிற்சபையில் எழுந்தருளியிருக்கும் நடராஜருக்கு வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய சாலரம் (ஜன்னல்). இதை சிதம்பர ரகசிய பீடம் என்றழைக்கிறார்கள்.   இங்கே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ மாலைகள் தொங்குவதை காணலாம். இதனை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் அழைப்பார்கள். திரஸ்க்ரிணீ என்கிற நீல வஸ்திரத் திரையால் மூடப்பட்டு இருக்கும். திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே இறைவன் என்பது தான் சிதம்பர ரகசியமாகும். இந்த வாயிலில்  உள்ள திரை அகற்றுப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது தங்கத்தால் செய்யப்பட்ட  'வில்வ தளமாலைகள்'  தொங்கும்  காட்சி மட்டுமே தெரியும். இறைவன் அருவமாக இருப்பதை பாமரர்களான நமக்கு உணர்த்தவே வில்வ தள மாலைகள் அங்கு தொங்குகின்றன. ரகசியம் இறைவன் ஆகாய உருவில் முடிவும் முதலும் இல்லாது இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. இதனால் தான் பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்தது.  புராணங்கள்  சி...

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 5

படம்
சகல லோகத்தையும் ஆட்டிவிக்கும் ஸர்வேஸ்வரன் ஆனந்த நடனமாட வந்திருப்பதாக முனிவர்கள் கூறினர். ஈசனுடன் விளையாட நினைத்த காளி "ஓ , எனக்கு ஈடாக ஆட முடியுமா உங்கள் ஈசனால் " என்று கேட்க. என்ன சொல்வது எனத் தெரியாமல் முனிவர்கள் ஈசனை நோக்க, அவரோ புன்முறுவலோடு போட்டியிட சம்மதம் தெரிவித்தார். அண்ட சராசரமனத்தையும் ஆட்டுவிக்கும் ஜகத்பிதாவும், ஜகன்மாதாவும் போட்டி நடனமாட தொடங்கினர். காளி புரிந்த அனைத்து அசைவுகளையும் சரியாக ஆடி காட்டினார் ஈசன். இப்பொழுது ஈஸ்வரன் ஆடுகின்ற அனைத்து அசைவுகளையும் இம்மியளவு கூட பிசகாமல் ஆடி போட்டியை விறுவிறுப்பாக்கினாள் காளி.  பார்த்தார் ஈசன் செங்குத்தாக தன் இடக்காலை தூக்கி தலைக்கருகில் பாதத்தை கொண்டு சென்று விட்டார். பராசக்தியால் இயலாத காரியமென்று ஒன்று உண்டோ? ஆனால் போட்டியை முடிக்க நினைத்து ஈசனை கண்டு நாணி நின்றாள் சிவசக்தி .  போட்டி முடிவுற்றதால் முப்பது முக்கோடி தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் முன்னிலையில் நந்தியும் விஷ்ணுவும் மத்தளம் கொட்ட தாருகாவனத்தில் ஆடிய ஆனந்த தாண்டவத்தை தில்லை வனத்தில் நிகழ்த்திக் காட்டின...

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 4

படம்
மஹாவிஷ்ணு ஆதிஷேனனை ஸர்வேஸ்வரனை நோக்கி தவமியற்றுமாறு அருளினார். ஆதிஷேஷன் இமயமலை அடிவாரத்திலே ஸர்வேஸ்வரரை நோக்கி கடுமையான தவமியற்றினார். மனமிரங்கிய கயிலைநாதன் ஆதி ஷேஷனுக்கு காட்சியளித்து அவரை அத்ரி மஹரிஷிக்கும் அனுசூயா தேவிக்கும் மகனாக பிறந்து தவத்தை தொடருமாறு அனுக்ரஹித்து மறைந்தார். ஈசனின் ஆக்ஞை படி ஆதிஷேசன் சிறிய பாம்பு வடிவந்தாங்கி அத்ரி முனிவரின் ஆசிரமம் அடைந்தார். அப்போது நதிக்கரையில் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்த அனுசூயா தேவி தன் இரு கைகளாலும் தண்ணீரை எடுத்த பொழுது அவர் கைகளில் வந்து விழுந்தார் ஆதிஷேசன். பாம்பு என்று பதறி அனுசூயா கைகளை  உதறவே, அந்த பாம்பானது அனுசூயாவின் கால்களில் விழுந்தது, விழுந்த உடனே ஒரு சிறு பாலகனாக உருமாறிய அந்த பாம்பு கூப்பிய (அஞ்சலி) கைகளோடு அனுசூயாவை வணங்கியது. அங்கே வந்த அத்ரி மகரிஷியிடம் தன்னை மகனாக ஏற்றக் கொள்ளுமாறு  அந்த பாலகன் வேண்டினான். அதை ஏற்ற அத்ரி , பாதத்தில்(பத) கூப்பிய கைகளோடு(அஞ்சலி)  கிடைத்தமையால் பதஞ்சலி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். உரிய வயது வந்தவுடன் அத்ரி மஹரிஷி பதஞ்சலிக்கு உபநயனம்...

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 3

படம்
ஒரு நாள் ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிஷேஷன் மீது பள்ளி கொண்டிருந்த ஸ்ரீமன் நாராயணன் இயல்புக்கு மாறாக மிக அதிகமாக கனக்கத் தொடங்கினார். ஆதிஷேஷன் தன்னுடைய ஆயிரம் முகங்களாலும் ஸ்ரீஹரியை உற்று நோக்கினார். இனம் காண முடியாத ஆனந்த பரவசத்தில் ஸ்ரீமன் நாராயணர் திளைப்பதை கண்டு வியப்புற்றார்.  ஆர்வத்தை அடக்க முடியாமல் ஸ்ரீஹரியிடமே இந்த ஆனந்தத்திற்கும் உடல் கனம் கூடியதற்கும் காரணத்தை வினவினார்.  அதற்கு பதிலளித்த விஷ்ணு "அனந்தா, முன்னொரு சமயத்தில் பரமேஸ்வரர் தாருகாவனத்தில் ஆடிய ஆனந்த தாண்டவத்தை நினைத்து பார்த்தேன். அந்த பரமானந்த அனுபவத்தாலேயே என் உடல் எடை அதிகமாயும், வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஆனந்தமும் ஏற்பட்டது" எனக் கூறினார். இதை கேட்ட ஆதிஷேஷன் தனக்கு அந்த திவ்ய சரிதத்தை கூறுமாறு பகவான் நாராயணனிடமே விண்ணப்பிக்க, அவர் தாருகாவனத்தில் நிகழ்ந்ததை அனந்தாகிய ஆதிஷேஷனுக்கு மகிழ்வுடன் சொல்லத் தொடங்கினார். தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர்களும் அவர்களின் பத்தினிகளும் தாங்கள் செய்யும் வேள்விகளின் பயனாகவே தேவர்கள் சக்தி பெறுகின்றனர் அதனாலேயே இவ்வுலகு இயங்குகிறது எனவு...

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 2

படம்
சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் உறவினரான மத்யந்தினர் என்னும் மகரிஷிக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மாத்யந்தினர் எனப் பெயரிட்டு தானே குருவாக இருந்து சிவ பக்தியை போதித்து வளர்த்து வந்தார். ஒரு நாள்  மாத்யந்தினர் தன் தந்தையை நோக்கி "இறைவனை அடையும் வழி யாது? என வினவ, அவரும் தென்திசையில் தில்லைவனத்தில் எழுந்தருளியிருக்கின்ற ஈசனான ஆதி மூலநாதரை வழிபடுமாறு அறிவுறுத்தினார். மாத்யந்தினர் அதனை ஏற்று தில்லைவனத்தை அடைந்து ஓங்கி உயர்ந்த ஒரு தில்லை மரத்தினடியில் சுயம்புவாக காட்சி தந்த பரமேஸ்வரனை கண்டு மகிழ்ந்து ஈசனை நீண்ட காலம் பூஜித்து வந்தார். அதிகாலையில் கண் விழித்து அக்காட்டில் மலர்ந்த மலர்களை கொண்டு ஈசனுக்கு நித்ய பூஜைகளை புரிந்து வந்தார். ஆயினும் அவர் மனதை ஒரு குறை வாட்டிக் கொண்டிருந்தது. விடிந்த பிறகு பூக்களை பறித்தால் வண்டுகள் தேனை உண்டு எச்சில் பட்ட மலர்களாகி விட்டன.விடியும் முன்பே மலர்களை பறிக்கலாம் என்றால் கண் பார்வை அவ்வளவு கூர்மையாக இல்லை அத்தோடு ஓங்கி உயர்ந்த மரங்களில் ஏறும் பொழுது வழுக்குகிறது என்று மனம் கலங்கினார். அவரின் மனக்குறையை போக்க ந...

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 1

படம்
தரிசிக்க முக்தி தரும் தலம். பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் தலம். மனித உடலின் அமைப்பை குறிக்கும் வகையில் கோயில் அமையப்பெற்ற தலம். இறைவன் உருவமாகவும், அருவுருவகவும், அருவமாகவும் ஒரே கோயிலில் காட்சி தரும் தலம். கோயில் என்று சொன்னாலே அது இந்த தலத்தையே குறிக்கும் என்னும் புகழ் பெற்ற தலம். அர்த்த ஜாமத்தில் உலகில் உள்ள பெரும்பாலான லிங்கங்களின் சிவகலைகளும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம். நித்தமும் அன்னாபிஷேகம் நடைபெறும் தலம், இதனால் அன்னக்ஷேத்திரம் என புகழ் பெற்ற தலம். ஒரே இடத்தில நின்று பிரம்மா, விஷ்ணு மற்றும் பரமேஸ்வரர் ஆகியோரை தரிசிக்க இயலும் தலம். ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் க்ஷேத்ரபாலராக அருள் செய்யும் தலம். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் கிடைத்த தலம். 274 தேவாரத் திருத்தலங்களில் முதன்மையான தலம். பெரியபுராணம் அரங்கேறிய தலம். எட்டு திசைகளிலும் எட்டு சாஸ்தா அருள்ப்புரியும் தலம். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம். ஆறு ஆதார தலங்களில் இருதய தலம். ஐந்து சபைகளை கொண்டு பெரும் புகழோடு விளங்கும் தலம். கோயிலின் பெயரே...