அம்பிகையும் நாராயணனும்

பராசக்தியான தேவி ஸ்ருஷ்டியின் பொழுது ப்ரக்ருதியான புவனேஸ்வரியாகவும், ராஜ்ய பரிபாலனம் செய்யும் பொழுது பவானியாகவும், யுத்தத்தில் மஹாதுர்க்கையாகவும், பிரளய காலத்தில் மஹாகாளியாகவும், குழந்தை வடிவில் பாலா திரிபுரசுந்தரியாகவும், புருஷ ரூபத்தில் விஷ்ணுவாகவும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறும். பரமேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரர் ஸ்வரூபத்தில் தன் உடலின் இடப்பகுதியை உமையவளான பராசக்திக்கு அளித்தார்.அதே பரமேஸ்வரர் ஹரிஹரனாக காட்சி தரும் திவ்ய கோலத்தில் உமையவளுக்குண்டான இடப்பகுதியில் நாராயணர் காட்சி தருகிறார். இதுவே அன்னை புருஷ ரூபத்தில் விஷ்ணுவாக இருப்பதை ஊர்ஜிதபடுத்துகிறது. கிருஷ்ணனின் புகழ் வாய்ந்த மற்றொரு பெயர் முகுந்தன். முகுந்தன் என்றால் முக்தியளிப்வன் என்று பொருள். அம்பிகையையும் இதே பொருளில் லலிதா ஸஹஸ்ரநாமம் முகுந்தா என்றழைக்கிறது. அன்னையை வழிபடும் ஸ்ரீவித்யா மார்க்கத்தில் கோபால சுந்தரி என்று ஒரு வடிவம் உண்டு. பாதி தேகம் கோபால கிருஷ்ணனாகவும் இன்னொரு பாதி லலிதா மஹாத்ரிபுரசுந்தரியாகவும் இருக்கும் அற்புத கோலம்....