சதாக்ஷி - கடும் பஞ்சம் தீர்த்த ஆயிரம் கண்ணுடையாள்!
அம்பிகையின் புகழ் பாடும் பொழுது பல்வேறு சமயங்களில் ஆயிரம் கண்ணுடையாள் என்று கூற கேட்டிருக்கிறோம். ஸர்வேஸ்வரிக்கு அப்படி ஒரு பெயர் வர காரணமாயிருந்த புனித சரிதத்தை பார்ப்போம்.
இரண்யாக்ஷனுடைய குலத்தில் வந்த ருரு என்பவனுக்கு துர்கமன் என்னும் மகன் பிறந்திருந்தான். அவன் சுக்கிராச்சாரியரின் ஆலோசனைப்படி ப்ரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனுடைய தவத்தை கண்டு மனமிரங்கிய நான்முகனும் அவன் முன் ப்ரத்யக்ஷ்மாகி வேண்டிய வரத்தை அருள சித்தமாயிருப்பதாக கூறினார். உடனே துர்கமனும் மூன்று லோகத்திலுள்ள அந்தணர்கள் தேவர்கள் முதலியவர்களிடத்திலுள்ள வேதங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே ஸ்வாதினமாக வேண்டும் எனவும் தேவர்களனைவரையும் ஜயிக்க கூடிய ஆற்றலையும் வரமாக கேட்டான். ப்ரம்மனும் அவன் கேட்ட வரத்தையருளி மறைந்தார்.
பூவுலகில் உள்ளோர் வேதத்தை மறந்ததால் சந்தி, ஔபாசனம், சிரார்த்தம், யக்ஞம், ஜபம் முதலிய யாவும் நின்று போயின. அவிர்பாகம் கிடைக்காததால் தேவர்கள் சக்தியிழந்து கிழதன்மை அடைந்தனர். மறையோர் செய்ய வேண்டிய காரியங்கள் நின்று போனதால் பல வருடங்கள் மழை பொய்த்தது, பூமி வறண்டது. எங்கு பார்த்தாலும் பஞ்சம், பசி, பட்டினி. இந்த அனர்த்ததில் இருந்து ஜகதீஸ்வரீயே நம்மை காக்க வல்லவள் என்றுணர்ந்தவர்கள் இமயமலை அடிவாரத்தில் ஒன்று சேர்ந்து பராசக்தியை துதித்தார்கள்.
தன் குழந்தைகளின் துக்கத்தை காண பொறுக்காத தேவி, அநேக கண்களை தன் உடம்பெங்கும் உடையவளாக அவர்கள் முன் தோன்றி அனைத்து கண்களில் இருந்தும் தாரை தாரையாக கண்ணீர் உகுக்க தொடங்கினாள்.
![]() |
சதாக்ஷி - ஆயிரம் கண்ணுடையாள் |
அம்பிகையின் கண்ணீரானது வெள்ளமென ஆறு, ஏரி, குளம் என பாய்ந்து தண்ணீர் பஞ்சத்தை நீக்கியது. அம்பாள் இவ்வாறு அநேக கண்களோடு தோன்றியதால் சதாக்ஷி எனவும் ஆயிரம் கண்ணுடையாள் எனவும் அழைக்கப்படுகிறாள்.
அம்பிகையை தரிசித்த பக்தர்கள் உன்னுடைய திவ்ய தரிசனம் வாய்க்க பெற்றும் உன்னை போற்றி துதிக்க சக்தியற்றவர்களாய் பசியோடு தவிப்பதை கூறினார்கள். அவர்கள் மேல் கருணை கொண்ட தேவி பல வித தானியங்கள், கிழங்கு வகைகள், மூலிகைகள், புஷ்பங்கள் மேலும் எண்ணற்ற புல், பூண்டு வகைகள், செடிகள், கொடிகள் போன்றவற்றை தன் கரங்களில் தாங்கி பூமியெங்கும் பரவ செய்து, பசி, பஞ்சம் முதலியவற்றை விரட்டியடித்தாள்.
இதனால் அன்னை சாகம்பரி என்று அழைக்கப்பட்டாள்.
பின்னர் துர்கமனிடமிருந்து வேதத்தை மீட்க சித்தம் கொண்டவளாய், பல்வேறு அஸ்த்ரங்களை தாங்கி, அவனுடன் போர் புரிந்து அவனை மாய்த்து வேதத்தை மீட்டு அருளினாள். துர்கமனை வதைத்ததால் துர்கி என்றும் துர்க்கை என்றும் லோக ப்ரசித்தி பெற்று விளங்குகிறாள்.
![]() |
ஸ்ரீதுர்க்கை |
அம்பாளின் இந்த திவ்ய சரிதமானது சதாக்ஷி மஹாத்மியம் என்று ஸ்ரீதேவி பாகவதம் விரிவாக பேசுகிறது.
இவ்வாறு அன்னை உலகத்தின் பஞ்சத்தை போக்கியதை நினைத்து அவளுக்கு நன்றி கூறும் விதமாக புரட்டாசி பெளர்ணமியன்று நிறைமணி காட்சி என்று கொண்டாடுகிறோம். அன்று அன்னையை பல விதமான காய் கனி மற்றும் கிழங்கு வகைகளால் அலங்கரித்து வழிபடுகிறோம். சில கோயில்களில் ஆடி அல்லது தை வெள்ளிக்கிழமைகளில் சாகம்பரி அலங்காரம் என்றும் இதை செய்வதுண்டு.
![]() |
நிறைமணி காட்சி |
சதாக்ஷி தேவியை ராஜா ஹரிசந்திரனும், அவன் மனைவி சந்திரமதியும் குலதெய்வாமாக வழிப்பட்டு வந்தனர். பொய்யுரைக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்த காரணத்தினால் நாடு, செல்வம், மனைவி, மகன் என அனைவரையும் பிரிந்து, இடுகாடு காக்கும் காவலனிடம் வேலை செய்து வயிறு வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மனைவியுடன் இருந்த மகனை பாம்பு தீண்ட இடுகாட்டுக்குக் கொண்டு வந்தாள் மனைவி. நள்ளிரவில் எரிக்கக் கட்டணம் கட்டாமல் எரிக்கவிட மாட்டேன் என தெரிவித்தான் ஹரிச்சந்திரன். தன்னிடம் கட்டணம் கட்ட எதுவும் இல்லை என்றவுடன் கழுத்திலே தொங்கும் தாலியை விற்றுக்கட்டு என்றான். தன் தாலி தன் கணவன் கண்ணுக்கு இன்றி வேறு ஒருவருக்கும் புலனாகாது என உணர்ந்து, அவனே தன் கணவன் என அறிந்து, அவனிடம் நிலைமையைக் கூறி கதறி அழுதாள் சந்திரமதி. இருவரும் தங்கள் குல தெய்வமான சதாக்ஷி தேவியை வேண்டினர். அம்பாள் அமிர்த மழை பெய்விக்க மகன் பிழைத்தெழுந்தான். விஸ்வாமித்திரரும் அவனது பக்தியைக் கண்டு மெச்சி இழந்த அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கச் செய்தார்.
இந்த அம்பிகைக்கு வடநாட்டில் ராஜஸ்தானிலும், கொல்கத்தா நகரின் அருகிலும் கோயில்கள் உள்ளன. கர்னாடகத்தில் பெங்களுருக்கு அருகில் பனசங்கரி என்ற பெயரில் இந்த அம்பிகை வழிபடபடுகிறாள்.
![]() |
பனசங்கரி - பெங்களுர் |
பொதுவாக தமிழ்நாட்டில் வனத்தினுல் இருக்கும் துர்க்கை, காளீ யாவும் அன்னையின் இந்த ஸ்வரூபத்தை தான் குறிக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் நாட்டரசங்கோட்டையில் ஆயிரம் கண்ணுடையாள் என்று ஒரு கோயில் இருக்கிறது.
![]() |
ஆயிரம் கண்ணுடையாள் - நாட்டரசங்கோட்டை |
இப்படி பக்தர்களின் துயர் துடைக்க ஆயிரம் கண்களுடன் தோன்றிய அன்னை சதாக்ஷியின் மலர் பாதம் பணிந்து அவள் அருள் பெறுவோம்.
Excellent info... Superb work... Loving this...kudos
பதிலளிநீக்குSadham means 100... Sahasra is 1000
She who graces her devotees with her beautiful 1000 eyes.. Sahasrakshi.
Thanks a lot for leaving a comment.. Yeah Guru, Sri Dhevi Bhagavatham also says Devi appeared with several eyes and did not mention the exact number but called her as Sadhakshi.. May be in Thamizh we started calling Aayiram Kannudaiyal :)
நீக்குPlease continue your good work... Would love to hear more....
பதிலளிநீக்குSure.. Thanks for encouraging me :)
நீக்குawsome blog vivek... blog liked by everyone in family.... a spl appriciation from my mom:-) .. keep up the good work ..!
பதிலளிநீக்குThanks a lot ditalae :)
பதிலளிநீக்கு