இடுகைகள்

டிசம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கம்பருக்கு அருள் செய்த கதிராமங்கலம் வனதுர்க்கை!

படம்
ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ துர்க்கா க்ஷமா சிவாதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே பாரெங்கும் தன் அருட்பார்வையால் படியளக்கும் பராசக்தி வானவர் தானவர் கிங்கரர் கிம்புருடர் ய க்ஷ்ர் மற்றும் மனிதர்களின் துயர் துடைக்கவே துர்க்கையாக வடிவம் கொண்டாள். துர்க்கை நேரடியாக பராசக்தியிடம்ருந்து ஒரு ஸ்வரூபமாக வெளிபடவில்லை மாறாக எந்த  அம்பிகையின் சக்தியை கொண்டு மும்மூர்த்திகளும் மற்ற தேவர்களும் கீர்த்தியை அடைந்தார்களோ அந்த சக்தியெல்லாம்  ஒன்று திரண்டு துர்க்கையாக வடிவம் கொண்டாள். இவளையே தேவி மஹாத்மியம் சண்டி என்று அழைக்கிறது. ஒரு நொடி பொழுதில் பல்லாயிரகணக்கான சக்தி சேனையை உருவாக்கி அசுர  சேனையை  நைய புடைத்தவள். கலெள சண்டி வினாயகெள  என்ற வாக்கியம் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக கணபதியும் துர்க்கையாகிய சண்டியும் விளங்குகிறார்கள் என்பதை எடுத்துரைக்கிறது.  அதனால் தான் அனைத்து சிவாலயங்களிலும் வடக்கு கோஷ்டத்தில் அன்னைக்கு சந்நிதி உண்டு. இத்தனை சிறப்பு பெற்ற துர்க்கைக்கு ப்ரத்யேகமான ஆலயங்கள் சில உள்ளன. அன்னை துர்க்கை தன் மனமுவந்து கொலுவீற்றிருக...

சதாக்ஷி - கடும் பஞ்சம் தீர்த்த ஆயிரம் கண்ணுடையாள்!

படம்
அம்பிகையின் புகழ் பாடும் பொழுது பல்வேறு சமயங்களில் ஆயிரம் கண்ணுடையாள் என்று கூற கேட்டிருக்கிறோம். ஸர்வேஸ்வரிக்கு அப்படி ஒரு பெயர் வர காரணமாயிருந்த புனித சரிதத்தை பார்ப்போம். இரண்யாக்ஷனுடைய குலத்தில் வந்த ருரு என்பவனுக்கு துர்கமன் என்னும் மகன் பிறந்திருந்தான். அவன் சுக்கிராச்சாரியரின் ஆலோசனைப்படி ப்ரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனுடைய தவத்தை கண்டு மனமிரங்கிய நான்முகனும் அவன் முன் ப்ரத்யக்ஷ்மாகி வேண்டிய வரத்தை அருள சித்தமாயிருப்பதாக கூறினார். உடனே துர்கமனும் மூன்று லோகத்திலுள்ள அந்தணர்கள் தேவர்கள் முதலியவர்களிடத்திலுள்ள வேதங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே ஸ்வாதினமாக வேண்டும் எனவும் தேவர்களனைவரையும் ஜயிக்க கூடிய ஆற்றலையும் வரமாக கேட்டான். ப்ரம்மனும் அவன் கேட்ட வரத்தையருளி மறைந்தார். பூவுலகில் உள்ளோர் வேதத்தை மறந்ததால் சந்தி, ஔபாசனம், சிரார்த்தம், யக்ஞம், ஜபம் முதலிய யாவும் நின்று போயின. அவிர்பாகம் கிடைக்காததால் தேவர்கள் சக்தியிழந்து கிழதன்மை அடைந்தனர். மறையோர் செய்ய வேண்டிய காரியங்கள் நின்று போனதால் பல வருடங்கள் மழை பொய்த்தது, பூமி வறண்டது. எங்கு பார்த்தாலும் பஞ்...

மகிமை மிக்க ஸ்ரீமாதங்கி பீடம் - மதுரை

படம்
ஸ்ரீராஜமாதங்கி மதுரையில்  மீனாக்ஷி ராஜ்ஜியம் எவ்வாறு கொடிக்கட்டி பறக்கிறது என்பதை என்னுடைய முதல் பதிவில் இங்கு   காணலாம். இப்படி ஸர்வேஸ்வரி இங்கு  ஸ்ரீராஜமாதங்கியாக எழுந்தருளி அரசாட்சி புரிவதால் தான் இவ்வளவு மகிமை என்று எண்ண தோன்றுகிறது. அப்படி என்ன விஷேஷம் இந்த  ஸ்ரீராஜமாதங்கி க்கு என்று பார்க்கலாம். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி பராபட்டாரிகையான  ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவளே  ஸ்ரீராஜமாதங்கி. இவளே  ஸ்ரீ லலிதையின் ராஜ்ஜியதில் பிரதம மந்திரி, பெண் என்பதால்  மந்திரிணி. மரகத வர்ணத்தில் ஜொலிப்பதால் ச்யாமளை என்றும் அழைக்கப்படுகிறாள்.  லலிதையின்   ஸ்ரீபுரத்திலுள்ள கடம்பவனத்துள் உலவுபவள் ச்யாமளா தேவி. அதனால் தான் பூவுலகின் கடம்பவனம் என்று போற்றப்படும் மதுரையில், மலையத்வஜ பாண்டிய மன்னன்- காஞ்சனமாலை ஆகியோரின் வேண்டுதலை ஏற்று அக்னி குண்டத்தில் உதித்தாள்  போலும். பராசக்தியான  ஸ்ரீ லலிதையும் சிதக்னி குண்டதில் தான் உதித்தாள் என்பது பராசக்தியும்  ஸ்ரீராஜமாதங்கியும் வெவ்வேறல்ல என்பதை உணர்த்துகிறது....

மரகதவல்லி மீனாக்ஷி!

படம்
எந்த பராசக்தியின் பெருமையை ஆயிரம்  நாவுகள்  கொண்ட ஆதிசேஷனாலும் முழுமையாக எடுத்து கூற இயலாதோ, அந்த பராசக்தியின் அருட்பெருங்கருணையை ஒரு துளியேனும் விவரிக்க முழுமுதற் கடவுளாகிய விநாயகரின் துணையை வேண்டி முதல் பதிவை தொடங்குகிறேன். முதல் பதிவு எழுத முடிவு செய்தவுடன் அம்பிகையை பற்றி தான் எழுத போகிறேன் என்பதில் குழப்பம் இல்லை, ஆனால் நிர்குண ப்ரம்மமாக உருவமற்றவளும், ஸகுண ப்ரம்மமாக பல்வேறு ஸ்வரூபங்கள் எடுத்து பக்தர்கள் துயர் களைந்தவளும், எண்ணற்ற கோயில்களில் வெவ்வேறு பெயர்களுடன் அருளாட்சி புரிபவளுமாக விளங்குபவளை எந்த ரூபத்தில் இருந்து தொடங்வது என்பதில் தான் குழப்பமாக இருந்தது. முடிவாக பக்தி, பராசக்தி, பரப்ரம்மம் என்றால் என்னவென்றே அறியாத வயதில் அவள் மேல் இனம் புரியாத அன்பும், உரிமையும் கொள்ளுமாறு தூண்டிய தயாபரி அன்னை மீனாக்ஷியிடம் இருந்து தொடங்வதே முறை எனப்பட்டது. எத்தனையோ கோயில்களில் அம்பிகை வரப்ராஸாதியாக பெருமை பெற்று இருந்தபோதிலும், எல்லா கோயில்களும் பெரும்பாலும் ஸ்வாமி பெயராலே அழைக்கபடுகின்றன. உதாரணமாக மயிலை கபாலிச்வரர் கோயில், இராமேஸ்வரம் இராமநாதர்  ...