கம்பருக்கு அருள் செய்த கதிராமங்கலம் வனதுர்க்கை!

ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ துர்க்கா க்ஷமா சிவாதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே பாரெங்கும் தன் அருட்பார்வையால் படியளக்கும் பராசக்தி வானவர் தானவர் கிங்கரர் கிம்புருடர் ய க்ஷ்ர் மற்றும் மனிதர்களின் துயர் துடைக்கவே துர்க்கையாக வடிவம் கொண்டாள். துர்க்கை நேரடியாக பராசக்தியிடம்ருந்து ஒரு ஸ்வரூபமாக வெளிபடவில்லை மாறாக எந்த அம்பிகையின் சக்தியை கொண்டு மும்மூர்த்திகளும் மற்ற தேவர்களும் கீர்த்தியை அடைந்தார்களோ அந்த சக்தியெல்லாம் ஒன்று திரண்டு துர்க்கையாக வடிவம் கொண்டாள். இவளையே தேவி மஹாத்மியம் சண்டி என்று அழைக்கிறது. ஒரு நொடி பொழுதில் பல்லாயிரகணக்கான சக்தி சேனையை உருவாக்கி அசுர சேனையை நைய புடைத்தவள். கலெள சண்டி வினாயகெள என்ற வாக்கியம் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக கணபதியும் துர்க்கையாகிய சண்டியும் விளங்குகிறார்கள் என்பதை எடுத்துரைக்கிறது. அதனால் தான் அனைத்து சிவாலயங்களிலும் வடக்கு கோஷ்டத்தில் அன்னைக்கு சந்நிதி உண்டு. இத்தனை சிறப்பு பெற்ற துர்க்கைக்கு ப்ரத்யேகமான ஆலயங்கள் சில உள்ளன. அன்னை துர்க்கை தன் மனமுவந்து கொலுவீற்றிருக...