ஆனந்த வாழ்வளிக்கும் ஸ்ரீ லலிதையின் சரிதம் !

ஸ்ரீ லலிதை கருணா ஸாகரமாக விளங்கும் அன்னை பராசக்தியின் பெருமையை எடுத்து கூற பல்வேறு ஸ்தோத்திரங்களும் பாமாலைகளும் இருந்தாலும் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமமே பெரும் புகழ் வாய்ந்ததாகவும் அம்பிகைக்கு மிகவும் உவப்பானதாகவும் விளங்குகிறது. அவ்வளவு பெருமை மிக்க ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் நாயகியான ஸ்ரீலலிதையின் சரிதத்தை காணலாம். முன்னொரு காலத்தில் பராசக்தியே தக்ஷனுக்கு மகளாக சதி தேவி என்ற திருநாமத்தோடு அவதரித்தாள். நாரதரின் மூலமாக பராசக்தியே தனக்கு மகளாக பிறந்திருப்பதை அறிந்து கொண்ட தக்ஷன் தேவியை பரமேஸ்வரனுக்கு மணமுடித்து தர மறுத்தான். இதனால் தக்ஷனின் சம்மதமின்றி சதி தேவியை பரமேஸ்வரன் மணமுடித்தார். மேலும் ஒரு சமயம் தேவர்கள் நடத்திய யாகத்திற்கு வந்திருந்த தக்ஷன் சிவன் தன்னை கண்டு எழுந்து வணக்கம் செய்யாததை அவமானமாக கருதினான். இச்சம்பவத்திற்கு பழி தீர்க்க எண்ணிய தக்ஷன் சர்வேஸ்வரனை அவமதித்து யாகமொன்றை நடத்தினான். தன் பதியின் அவமானத்தை துடைக்க எண்ணி சிவனின் வார்த்தையையும் மீறி யாக சாலையை அடைந்த சதி தேவியையும் தக்ஷன் நிந்திக்க, தேவியானவள் யாக குண...